சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சக்குடி அருகே வேகமாக வந்த போலீஸ் வாகனம் இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், சிட்டப்பட்டியைச் சேர்ந்தவர். பிரசாத்(25). இவர் தனது மனைவி சத்தியா(20), 2 வயது மகன் அஸ்வினுடன் செவ்வாய்க்கிழமை உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வாகனத்தில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களுடன் அனஞ்சியூரைச் சேர்ந்த உறவினர் சோனை ஈஸ்வரி(25) என்பவரும் வந்துள்ளார்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் சக்குடி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்யா மற்றும் 2 வயது குழந்தை அஸ்வின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தனர். இவர்களுடன் வந்த சோனை ஈஸ்வரி பலத்த காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20) மற்றும் அவர்களது மகன் அஸ்வின் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனஞ்சியூரைச் சேர்ந்த உறவினரான சோனை ஈஸ்வரி (25) மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு நிகழ்வுகளுக்காக திருச்சி நகருக்கு வந்திருந்தபோது, காவலா் வீட்டுக்குள் 5 போ் கொண்ட கும்பல் புகுந்து இளைஞா் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்டவர் திருச்சி பீமநகர் மாா்சிங்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்த பாரூன் மகன் தாமரைச்செல்வன் (23). இவா், தனியாா் மனைவணிக நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்வர் என அடையாளம் காணப்பட்டார்.
தாமரைச்செல்வன், திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுள்ளாா். பீமநகரில் உள்ள ஒரு மசூதி அருகே காத்திருந்த 5 போ் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது.
கையில் வெட்டுக்காயத்துடன் தப்பியோடிய தாமரைச்செல்வன் பாதுகாப்புக்காக பீமநகா் மாா்சிங்பேட்டை பகுதியிலுள்ள காவலா் குடியிருப்பின் ஏ- பிளாக்கில் உள்ள தில்லைநகா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் செல்வராஜ் வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டாா். அவரைத் துரத்திக்கொண்டு வந்த கும்பலும் காவலா் வீட்டுக்குள் நுழைந்து அந்தக் கும்பல், சமையலறையில் ஒளிந்துகொண்டிருந்த தாமரைச்செல்வனை அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
காவலா் வீட்டுக்குள்ளேயே நுழைந்து இளைஞரை வெட்டிப் படுகொலை செய்யும் அளவிற்கு திருச்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.