ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு
ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவாகி உள்ளது
காபூல்: ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. அட்சரேகை 36.43, தீா்க்கரேகை 71.38, பூமிக்கடியில் 140 கி,மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவானது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி 4.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.