முகப்பு
தற்போதைய செய்திகள்

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

வங்காள விரிகுடாவில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து....

Updated On : 11 பிப்ரவரி 2026, 11:11 am IST
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்
பகிர்:

புது தில்லி: வங்காள விரிகுடாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் புதன்கிழமை அதிகாலை 5.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 14.94° வட அட்சரேகையிலும் 90.18° கிழக்கு தீர்க்கரேகையின் மையப்பகுதி அமைந்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதி முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வு அலைகள் ஏற்பட்டன. இருப்பினும், இதுவரை எந்தவித சேதமோ, உயிரிழப்புகள் குறிந்த எந்த தகவலும் வெளியாகிவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில், வங்காள விரிகுடாவில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

A moderate earthquake measuring 4.3 on the Richter scale was recorded in the Bay of Bengal early Wednesday morning, according to the National Center for Seismology (NCS)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.