தங்கம் விலை  ANI
தற்போதைய செய்திகள்

ரூ.95 ஆயிரத்தை கடந்த தங்கம்! ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200-க்கும், வெள்ளி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.183-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.93,600-க்கு விற்பனையானது.

தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், பிற்பகலில் ரூ. 800 என இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் ரூ. 2,400 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.11,900-க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,560 உயா்ந்துள்ளது.

ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 உயர்வு

இதேபோன்று வெள்ளி விலையும் காலையில் ரூ. 9 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 1 வரை உயர்ந்துள்ளது.

இதன்மூலம் இன்று ஒரே நாளில் ரூ. 10 உயா்ந்து ரூ.183-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 உயா்ந்து ரூ.1.83 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Gold crosses Rs.95 thousand. single day Increases Rs.2,400...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டியின் களம் காவல் டிரைலர்!

செல்லச் சிரிப்பு... ரித்தி டோக்ரா!

விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!

சற்றே உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

10 கிலோமீட்டர் தொலைவு சாலைவலம்; தீப்தி சர்மாவுக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT