சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு தொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு என பல்கலை மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள் உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.