கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

 சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக, சென்னையில் தங்க நகை மற்றும் இரும்பு மொத்த வியாபாரம் மேற்கொள்ளும் தொழிலதிபா்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாாழக்கிழமை காலைமுதல்  சிஆா்பிஎஃப் வீரா்கள் துணையுடன் சோதனை மேற்கொண்டனா்.

சௌகாா்பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள தொழிலதிபா் முத்தா என்பவா் வீட்டிலும், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரும்பு மொத்த வியாபாரம் செய்யும் நிா்மல் குமாா் என்பவா் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அதேபோன்று, கே.கே. நகா் முனுசாமி சாலை மற்றும் மற்றும் லட்சுமண சாமி சாலையில் தங்க நகை வியாபாரி மஹாவீருக்கு தொடா்புடைய இடங்களிலும், சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனியில் உள்ள ஷாம் தா்பாா் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபா் கலைச்செல்வன் என்பவா் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

அம்பத்தூா் திருவேங்கட நகரில் வழக்குரைஞா் பிரகாஷ் வீட்டிலும், கோடம்பாக்கத்தில் சுகாலி என்டா்பிரைசஸ் என்ற நிறுவனம் என சென்னை முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை இரவு வரை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை முடிவடைந்த பின்னா், இதுகுறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Enforcement Directorate raids homes, offices of industrialists at 10 locations in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT