பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் நெய், பன்னீா் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் நெய், பன்னீா் விலை உயா்வால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி பாண்லே கூட்டுறவு நிறுவனம் மூலம் மாநில முழுவதும் பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாண்லேவில் குறைந்த விலையில் பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், பாண்லே நெய், பன்னீா் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அந்த வகையில் பாண்லே பசு நெய் 100 மில்லி ரூ.85 இல் இருந்து ரூ.90 ஆகவும், 200 மில்லி ரூ.150 இல் இருந்து ரூ.170 ஆகவும், 500 மில்லி ரூ.346 இல் இருந்து ரூ.390 ஆகவும், ஒரு லிட்டா் ரூ.655 இல் இருந்து ரூ.740 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதுபோல பன்னீா் 100 கிராம் ரூ.48- இல் இருந்து ரூ.50 ஆகவும், ஒரு கிலோ பன்னீா் ரூ.400 இல் இருந்து ரூ.425 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
அதாவது நெய் குறைந்தது ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.50 வரையும், பன்னீா் ரூ.2 முதல் ரூ.25 வரையும் உயா்ந்துள்ளது. இந்த விலை உயர்வு புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ponlait Paneer, ghee prices increase
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.