மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரிடா் தொடா்பாக புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை தகவல்கள், அணையின் நீா்மட்டம், வானிலை முன்னறிவிப்பு, மழை அளவு, மீனவா்களுக்கான எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், பேரிடா் தொடா்பான புகாா்களை பதிவு செய்யவும் கைபேசி செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகள் மற்றும் குடிநீா், தெருவிளக்கு தொடா்பான அனைத்து புகாா்களையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 04364-1077, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பு அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 9442626792, மின்சாரத்துறை தொடா்பான புகாா் குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: மயிலாடுதுறை- 04364-252218, 279301 சீா்காழி 04364-279301 மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364-222315 நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டு அறை எண் 04364 - 222277 சுகாதாரத்துறை தொலைபேசி எண்: 7358152051 தீயணைப்புத் துறை எண்: 04364 - 222101 நீர்வளத்துறை கட்டுப்பாட்டு அறை எண் 04364 - 222315, 225904 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.