கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.22) காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதைத்தொடா்ந்து இப்புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் தொடா்ந்து நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் மேலும் வலுப்பெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறும் பட்சத்தில் இதற்கு ‘சென்யாா்’ என பெயா் சூட்டப்படும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (நவ.22) முதல் நவ.27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில் குறிப்பாக, நவ.22-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ.23-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், நவ.22, 23 தேதிகளில் காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கடலூர், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 15 மாட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chance of rain in 15 districts for the next 2 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

கல்வராயன் மலையில் பயங்கரம்: நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

SCROLL FOR NEXT