இந்திய மகளிர் கிரிக்கெட் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தன் திருமணம் தொடர்பான விடியோகளை நீக்கியுள்ளார்.
ஸ்மிருதி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் நவ. 23 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், திருமணத்தை ஒத்திவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
தொடர்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஸ்மிருதி மந்தனா திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட விடியோவை தன் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
மேலும், திருமணம் தொடர்பாக எடுத்துக்கொண்ட ரீல்ஸ்களை ஸ்மிருதியும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட சக வீராங்கனைகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
திருமணம் நின்றதற்குக் காரணம், பலாஷ் முச்சல் திருமணத்திற்குச் சில நாள்கள் முன் பெண் நடன இயக்குநருடன் அந்தரங்கமாக இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டதாக சில ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
உண்மையிலேயே, தந்தையால் திருமணம் நின்றதா இல்லை பலாஷ் முச்சல், ஸ்மிரிதை ஏமாற்றினாரா? என பலரும் விவாதித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிருத்விராஜின் விலாயத் புத்தா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.