முகப்பு
கிரிக்கெட்

கடும் காய்ச்சலுடன் இறுதிப்போட்டியில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா கடும் காய்ச்சலுடன் விளையாடியதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி 2026, 2:27 pm IST
ஸ்மிருதி மந்தனா - படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா கடும் காய்ச்சலுடன் விளையாடியதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி, கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோல் இருவரின் அபார ஆட்டத்தால் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement

Advertisement

கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்களும் (12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 79 ரன்களும் (14 பவுண்டரிகள்) எடுத்தனர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

கடும் காய்ச்சலுடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா கடும் காய்ச்சலுடன் விளையாடியதாக ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மலோலன் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் போட்டி நிறைவடைந்த பிறகு பேசியதாவது: இறுதிப்போட்டிக்காக ஸ்மிருதி மந்தனா அவரது சிறந்த ஆட்டத்தை சேமித்து வைத்து விளையாடியுள்ளதாக நினைக்கிறேன். இதை நான் கூறுவதற்கு காரணம், கடந்த ஓராண்டாக ஸ்மிருதி மந்தனா மிகவும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஆனால், இறுதிப்போட்டியில் அவர் மேலும் சிறப்பாக விளையாடினார். அவரது ஷாட் தெரிவுகள் மற்றும் டைமிங் என அனைத்தும் அற்புதமாக இருந்தது.

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா கடும் காய்ச்சலுடன் விளையாடினார். அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அணிக்காக சிறப்பாக விளையாடினார். அவருக்கு காய்ச்சல் என்பது அணியில் உள்ள யாருக்கும் தெரியாது. தனக்கு காய்ச்சல் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் விளையாடினார் என்றார்.

summary

The Royal Challengers Bangalore coach has stated that Smriti Mandhana played in the Women's Premier League final with a high fever.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.