கோவை, கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு 
தற்போதைய செய்திகள்

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் 56 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: கோவை, கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளன. இங்கு அரசு அலுவலா்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு ‘ஏ’ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி (3) பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து வீடுகளின் உரிமையாளா்கள் அங்கு சென்றனா். கவுண்டம்பாளையம் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற வீடுகளில் மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளில் நகை - பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

56 Sovereign, Rs. 3 lakh stolen from 13 houses in a row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

மேலூா் அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: இளைஞா் உள்பட மூவா் உயிரிழப்பு!

மாசுவைக் கட்டுப்படுத்த இசிசி நிதியை முறையாகச் செலவிடாதது ஏன்? தில்லி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!

சிறந்த தோ்தல் மாவட்டம் காசா்கோடு: நீலகிரியைச் சோ்ந்தவருக்கு விருது

SCROLL FOR NEXT