திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

குட்ட குட்ட குனிய மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது சரியா?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, பேரவையில் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்.

வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் மத்திய பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .

We will not bow down to anyone says Chief Minister M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிஐசிஐ வங்கியின் 3வது காலாண்டு வருவாய் சரிவு!

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்!

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி; 10 ஓவர்களில் நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை!

எங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு எதிரிகள் இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

SCROLL FOR NEXT