நமது கருத்துகள் மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசுகையில்,
சில வெளிநாட்டு சித்தாந்தங்கள் இந்தியாவிற்கு வந்த போதெல்லாம், அவற்றை நாம் நம்முடையதாகவே கருதினோம்.
உலகில் உள்ள பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம்... ஆனால் நம் நாட்டில், இந்த பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது கருத்துகள் மற்ற மதத்தினரையோ, அவர்களின் நம்பிக்கையையோ அவமதிக்கவோ அல்லது இழிவுபடுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
பலதரப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்ட பலர் ஒரு சமூகத்தில் இணைந்து வாழும்போது, அவ்வப்போது சில சத்தங்களும் குழப்பங்களும் ஏற்படலாம். இருப்பினும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் நல்லிணக்கம் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அவரவர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதும், தெருக்களில் இறங்கி வன்முறை மற்றும் குண்டர் செயலில் ஈடுபடுவது சரியல்ல.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தூண்டி, ஒருவரின் பலத்தைக் காட்டும் செயல் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.