முகப்பு
தற்போதைய செய்திகள்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2025 at 9:06 AM
மியான்மரில் நிலநடுக்கம்
பகிர்:
Updated On : 10 அக்டோபர், 2025 at 9:03 AM

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் வெள்ளிக்கிழமை(அக்.10) அதிகாலை 5.53 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

Updated On : 10 அக்டோபர், 2025 at 9:03 AM

இருப்பினும், மிதமான அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 5 ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், 6 ஆம் தேதி 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 ஆம் தேதி மியான்மரில் பூமிக்கடியில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் 3.3 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On : 10 அக்டோபர், 2025 at 9:05 AM
summary

An earthquake of magnitude 4.2 struck Myanmar early Friday morning, the National Centre for Seismology (NCS) said.

Updated On : 10 அக்டோபர், 2025 at 9:05 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.