மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு நிலவியது.
மதுரையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை கவனித்த விமானி சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 74 பயணிகள், 5 விமான பணியாளர்கள் என மொத்தம் 79 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தற்போது விமானத்தின் கண்ணாடியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
நடுவானில் விமானத்தின் கண்ணாடி உடைந்ததற்கு காரணம் எதுவும் வெளியாகவில்லை.
சென்னையில் இருந்து மதுரைக்கான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.