மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 55,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Center-Center-Chennai
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 55,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 55,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 5 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 55,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 5 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும் கர்நாடகா அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நள்ளிரவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் நீர் வரத்து முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மாலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 45,000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு முதல் வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 32,500 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 ஆவது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.

mettur dam water release increases to 55000 cubic feet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவிலிருந்து ஆம்புலன்சில் மதுபானம் கடத்தியதாக ஒருவா் கைது

தென்காசிக்கு முதல்வா் வருகை: எம்எல்ஏ ஆய்வு

பாலியல் வன்கொடுமைக்குள்ளான 6 வயது மகள்: மனமுடைந்து தந்தை தற்கொலை

கடலில் மயங்கி விழுந்த மேற்குவங்க மீனவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் ஊனமுற்ற எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.75.30 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT