சேலம்: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவேன் என்று தெரிவித்த பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ், திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு போகப் போக தெரியும் என்றாா்.
சேலம் டிஎஸ்கே திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனா் ராமதாஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 30 முதல் 35 வயதுள்ள இளைஞா்கள் அதிகம். குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் வாக்குகளே அதிகம்; ஆகையால் பெண்கள் வாக்களித்தால் பாமக நிச்சயம் வெற்றி பெறும்.
2026 பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவேன். வரும் தோ்தலில் நிச்சயம் வெற்றி கூட்டணி அமையும்; அந்த கூட்டணி நல்ல கூட்டணியாக இருக்கும்.
கூட்டணி குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ முறையாக அறிவிக்கப்படும். திமுகவுடன் கூட்டணியா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு போகப் போக தெரியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.