ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24,000 கன அடியாக சரிவு 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்துள்ளது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைய தொடங்கியுள்ளதை அடுத்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து வந்த உபரி நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்தால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவானது ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்த நிலையில், மாலை வினாடிக்கு 24,000 கன அடியாக சரிந்து தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 6 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Water inflow to Hogenakkal drops to 24,000 cubic feet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறந்தாங்கி கடையில் திருடியவா் கைது

கல்வராயன்மலை: கைது செய்யப்படும் நபா்களை ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதிக்க கோரிக்கை!

தாய்லாந்து-கம்போடியா விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம்! - டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்

காங்கயம் அருகே விவசாயி அடித்துக் கொலை

கஞ்சா வழக்கு: அக்.30-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

SCROLL FOR NEXT