கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் இரா.ராஜவேல் .  
தற்போதைய செய்திகள்

9 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் நியமனம்!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

பாரதியார் பல்கலைக் கழகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பதிவாளர் பதவி நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முழு நேர நிரந்தர பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது பதிவாளர், பல்கலைக் கழக சட்ட விதி மற்றும் முறைமைகள் உயர்கல்வித் துறை கடிதம் எண் 250-ன் படி மற்றும் துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் ஆணையின்படி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக துறைத் தலைவர்களாக பணியாற்றி வந்த பேராசியர்களை சுழற்சி முறையில் மாற்றம் செய்வதால் துறைகளின் வளர்ச்சி பலவகைகளில் மேம்படும் என்பதாலும், 17 துறைகளில் பணிமூப்பு அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் புதிய துறைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் பல்கலைக் கழகத் துறைகளில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் துறைத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

Coimbatore Bharathiar University Registrar appointed after 9 years!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!

சுதியோடு லயம் போலவே... நபா நடேஷ்!

அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

2-வது அரையிறுதி: இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

நிறைவடைகிறது மக்களின் விருப்பத் தொடர்!

SCROLL FOR NEXT