கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மங்களூர் கிராமம், மேட்டுத் தெருவில் வசிக்கும் செந்தில் (45) புதன்கிழமை மாலை (அக்.29) சுமார் 4 மணியளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில் உடனடியாக சிகிச்சைக்காக மங்களூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.