தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி எரிவாயு மானியம் ரூ.100 வழங்காமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், ஏழை மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? என்பதே அனைத்து தரப்பு மக்களின் ஆதங்க குரலாக ஒலிக்கிறது.
இத்தகைய சூழலில், வருகிற பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைப்பதற்குக் கூட தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.