ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
2023-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்றது. தற்போது, கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வந்தது.
கடந்த ஒரு வாரமாக கோவையில் நடைபெற்ற ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, சென்னை விமானத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகிப் பால்கே விருது பெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜுன் 12 ஆம் தேதி ஜெயிலர் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவித்த ரஜினிகாந்த் அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு காரில் ஏறிச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் ஜெயிலர் இரண்டாம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.