விராலிமலை: விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விராலிமலையைச் சேர்ந்த 93 வயதான முத்து கண்ணம்மாள் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். தனது சிறுவயது முதலே சதிராட்டத்தில் தேர்ச்சி பெற்றவர். முன் காலத்தில் விராலிமலை முருகன் மலைக்கோயில் சுவாமி கிரிவலத்தின் போது இவரது சதிராட்டம் முன்னே செல்லும், அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் சதிராட்டத்தின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இன்றும் அந்த பகுதி பெண்பிள்ளைகளுக்கு சதிராட்டம் கற்றுத்தரும் இவரிடம் தற்போது பிரபலமாக உள்ள பல நாட்டியக் கலைஞர்கள் சதிராட்டம் குறித்து பல சந்தேகங்களை கேட்டு அறிந்தார்கள் ஆவார்கள்.
சதிராட்ட கலைஞரான இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்து புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2021, 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.