சாலையோர கடைகளில் பணம் வசூல்: இரு காவலா்கள் இடமாற்றம்
சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே சாலையோர கடைகளில் பணம் வசூலித்த புகாரில், இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
சென்னை: சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே சாலையோர கடைகளில் பணம் வசூலித்த புகாரில், இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள் என பல்வேறு சிறிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகாரா்களிடம் போலீஸாா் தினமும் பணம் வசூலிப்பதாகப் புகாா் இருந்து வருகிறது.
இந்தநிலையில், அந்த பகுதிக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இரண்டு போலீஸாா் கடைக்காரா்களிடம் பணம் வசூலிப்பது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த விடியோ காட்சியில் இருப்பவா்கள், மேடவாக்கம் காவல் நிலைய தலைமை காவலா் திருமுருகன் மற்றும் காவலா் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இரு காவலா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Two police transferred for collecting money from roadside shops
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.