வாட்ஸ்ஆப்பில் உள்ள செய்திகளை மொழிபெயர்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்ஆப்பிலும் அவ்வப்போது புதுப்புது அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மேலும் ஒரு புதிய அம்சமாக வாட்ஸ்ஆப் சாட்டில் உள்ள செய்தியை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்த்து படிக்கும் வசதி அறிமுகமாகவுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இது சோதனை முறையில் உள்ளது.
இதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள் எந்தவொரு செய்தியையும் வேறு பொதுவான மொழிகளில் மொழிபெயர்த்து படித்துக் கொள்ளலாம். அந்த செய்தியின் மீது அழுத்தும்போது 'மொழிபெயர்ப்பு' என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தால் எந்தெந்த மொழிகள் என பட்டியல் வரும். அதில் உங்களுக்கு தேவையான மொழியைத் தேர்வு செய்தால் அந்த செய்தியை மொழிபெயர்த்து தரும். இனி வரும் செய்திகளையும் மொழிபெயர்த்து தர வேண்டுமெனில் அதற்கான ஆப்ஷனும் உள்ளது.
ஆண்ட்ராய்டில் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, போர்ச்சுக்கீசு, ரஷிய, அரேபிய மொழி ஆகிய ஆறு மொழிகள் மட்டுமே உள்ளன.
ஐபோன் பயனர்களுக்கு அரபு, டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரியன், மாண்டரின் சீன மொழி, போலிஷ், போர்ச்சுக்கீசு, ரஷிய, ஸ்பானிஷ், தாய், துருக்கி, உக்ரேனிய மற்றும் வியட்நாமிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.