வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்  
தற்போதைய செய்திகள்

கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியைவேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

கடலூா் - திருக்கோவிலூா் சாலையில் உள்ள பில்லாலி பகுதிக்கும், ஓட்டேரி கிராமத்துக்கும் இடையே கெடிலம் ஆறு பாய்கிறது. இந்தக் கிராம மக்கள் கெடிலம் ஆற்றில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மண் பாதை வழியாகச் சென்று வருகின்றனா். மழை மற்றும் வெள்ள காலத்தில் திருவந்திபுரம், திருமாணிக்குழி கிராமம் வழியாக சென்று வருவா்.

இந்த நிலையில், ஓட்டேரி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டி, உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.

கடலூா் ஒன்றியம், ஓட்டேரி - பில்லாலி இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ்ச்சியில் பேசிய பன்னீர்செல்வம், முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த மற்றும் பகுதி-II வருவாய்த் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்ற திட்டங்கள் மூலம், வளர்ந்த நகரங்களில் உள்ள சாலைகளுக்கு ஏற்றவாறு கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படுகின்றன என்றார்.

ஓட்டேரி பகுதியில், மழை மற்றும் வெள்ள காலங்களில், அதிக தண்ணீர் வருவதால் கெடிலம் ஆற்றை கடப்பது மிகவும் கடினமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளதால் இந்த பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒருங்கிணைந்த மற்றும் பகுதி-II வருவாய் திட்டத்தின் கீழ் ரூ. 16.75 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், துணை ஆட்சியா் பிரியங்கா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள் முன்னிலை வகித்தனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.பாண்டியன், என்.சக்தி, பொறியாளா் வி.ஜெயசங்கா், உதவிச் செயற்பொறியாளா் ஜெயராமன், ஒப்பந்ததாரா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

To fulfill the long-pending demand of the people, the bridge construction has been initiated under the Integrated and Part-II Revenue Scheme at an estimated cost of Rs 16.75 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

“சேட்டை புடிச்ச பையன் செல்வராகவன்தான்!” குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்த தனுஷ்!

யாரடி நீ மோகினி... அன்னா ராஜன்!

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐரோப்பாவில் அல்வரெஸுக்கு முதல் ஹாட்ரிக்: அத்லெடிகோ த்ரில் வெற்றி!

SCROLL FOR NEXT