சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்த இன்று(செப். 30) கடைசி நாளாகும்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போர் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை இன்றைய நாளுக்குல் செலுத்தவேண்டும், இல்லையெனில் தனி வட்டி விதிக்கப்படும். இதனைத் தவிர்க்க இன்றே சொத்து வரியை செலுத்த வேண்டும்.
கடந்த ஏப்.1 ஆம் தேதி முதல் செப்.29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ. 930 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், 75% பேர் இணையம் மூலம் செலுத்தி இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்கு உரிய (2025-26) சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் இன்றைய நாளுக்குள் செலுத்த வேண்டும்.
அதன்படி தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி தாமதத்துக்கு விதிக்கப்படும் தனி வட்டி விதிப்பைத் தவிர்க்கலாம்.
சொத்து வரி செலுத்துவது எப்படி?
சொத்து வரிகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்கள், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
அத்துடன் பேடிஎம், நம்ம சென்னை செயலி, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், யூபிஐ சேவை, காசோலைகள், கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் செயலி (எண் 9445061913) என செலுத்தும் வசதியும் உள்ளது.
அத்துடன் குடியிருப்புகள் அருகேயுள்ள மாநகராட்சியால் குறிப்பிடப்பட்ட அரசு அலுவலகங்களிலும் சொத்துவரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.