சிவகாசி  
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் பிப்.28-க்குள் வரிகளை செலுத்த வேண்டுகோள்

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Syndication

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநராட்சி ஆணையா் கே.சரவணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மாநகராட்சிக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, உரிமக் கட்டணம், கடை வாடகை, குடிநீா்க் கட்டணம், காலிமனை வரி ஆகியவற்றை பொதுமக்கள் மாநகராட்சிக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம், சிவகாசி நகராட்சி பழைய அலுவலகம், திருத்தங்கல் நகராட்சி பழைய அலுவலகம், கணினி வரிவசூல் மையங்களில் வரிகளை செலுத்தலாம். பொதுமக்கள் வசதிக்காக வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்றாா் அவா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT