முகப்பு
தற்போதைய செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

கோவையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான 2 ஊழியர்களின் உடல்கள் 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது குறித்து...

Updated On : 4 ஏப்ரல் 2026, 12:36 pm IST
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான 2 ஊழியர்களின் உடல்களை மீட்கும் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள். மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமார் - டிஎன்எஸ்
பகிர்:

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான 2 ஒப்பந்த ஊழியர்களின் உடல்கள் 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சி 69-ஆவது வார்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் உள்ள 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்ட கழிவுநீர் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்து 60 எச்.பி மோட்டார் பழுதானது.

இதையடுத்து ரத்தினபுரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அர்ஜுன்குமார் (38), பாப்பம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சுரேஷ் (27) இருவரும் மோட்டார் பழுதை சரிசெய்து பொருத்திவிட்டு மேலே ஏறியபோது, ஒப்பந்த ஊழியர் அர்ஜுன்குமார் எதிர்பாராதவிதமாகத் தலை இடித்துத் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியரான எலக்ட்ரீசியன் சுரேஷ் அவரை மீட்பதற்காக கீழே இறங்கிய போது, நச்சு வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி அவரும் 40 அடி ஆழக் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.

Advertisement

Advertisement

8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உடல்கள் மீட்பு

தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவு நீரை வெளியேற்றி சுமார் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உடல்களை மீட்டனர்.

இதற்கிடையே, கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மீட்புப் பணிகளை பார்வையிட்டதுடன், கண்ணீருடன் காத்திருந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

summary

Two Workers Die After Falling into Sewage Tank: Bodies Recovered After 8-Hour Struggle...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.