பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை
சென்னை கோடம்பாக்கத்தில் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் விசாரணை குறித்து...
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக பாஜக, அதிமுக நிா்வாகிகள் இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் பாஜக நிா்வாகி, வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாக தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் கிடைத்தது.
அதையடுத்து அந்த பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அங்கு இருந்த பாஜக நிா்வாகியிடம் சோதனை செய்து, அவரிமிருந்து ரூ.21,500 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதேபோல, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் 6-ஆவது தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அதிமுக நிா்வாகியின் இருசக்கர வாகனத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் அப்பகுதி வாக்காளா்களின் பட்டியல் நகல் வைத்திருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.