முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்சியில் பங்கு ஒத்து வராது; காங்கிரஸிடம் நேரடியாகவே முதல்வர் சொல்லி இருக்கலாம்: செல்லூர் ராஜு

ஆட்சியில் பங்கு தருவது ஒத்துவராது என காங்கிரஸிடம் முதல்வர் நேரடியாகவே சொல்லி இருக்கலாம் என....

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:59 PM
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:52 PM

மதுரை: ஆட்சியில் பங்கு தருவது ஒத்துவராது என காங்கிரசிடம் முதல்வர் நேரடியாகவே சொல்லி இருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கம் நகர் 1-வது தெருவில் பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேவர் ப்ளாக் சாலையை அமைக்க பூமி பூஜை செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு," மதுரை மாநகராட்சியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை. சரியான புள்ளிவிவரங்களை முதல்வருக்கு வழங்கவில்லை. 2.57 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டதாக முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு முடிக்க வேண்டிய பணியை காலதாமதாக தொடங்கி முழுமையாக செயல்படுத்தாமல் உள்ளார்கள்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:53 PM

துக்ளக் தர்பார் ஆட்சி

Advertisement

மாநகராட்சியில் ஒரு மேயரை நியமிக்க முடியவில்லை. துணை மேயர் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது நம்பிக்கை இல்லையா? மேயர் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். துக்ளக் தர்பார் ஆட்சிபோல் திமுக ஆட்சி உள்ளது. ஒரு சர்வேயில் தமிழ்நாட்டில்தான் அதிகளவில் தலித் பெண்கள் பாதிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது திருமாவளவனுக்கு தெரியுமா? தெரியாதா?

திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள் என்ற முதல்வரின் கருத்துக்கு, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என முதல்வர் தானே சொல்கிறார்?

தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனத்திற்கு, அது பிரேமலதாவிடம் கேளுங்கள். கேப்டன் விஜயகாந்த் கட்சியிடம் கேளுங்கள்.

ஆட்சியில் பங்கு தருவது ஒத்துவராது

ஆட்சியில் பங்கு தருவது ஒத்துவராது என்ற முதல்வரின் கருத்துக்கு, அதை யார் கேட்கிறார், காங்கிரஸ் கட்சி தானே கேட்கிறது. அதை நேரடியாக முதல்வர் சொல்ல வேண்டியது தானே?

ஆட்சி மாற்றம் ஒன்றுதான் முழுமையான தீர்வு

கடந்த தேர்தல் அறிக்கையில் ஒரு சொட்டுகூட மது இருக்காது. இளம் விதவை அதிகமாய் உள்ளனர் என்று கூறினார் கனிமொழி. இப்போது இளம் விதவைகள் குறைந்து விட்டார்களா? அதை கனிமொழி கூற வேண்டும். பிரதமர் திருப்பரங்குன்றம் செல்கிறார்களா என்று பாஜக அலுவலகம்தான் கூற வேண்டும். எனக்கு உடம்பு ஃபுல்லா வியாதி என தாடி பாலாஜி கூறுவார். அனைத்து வியாதிகளுக்கும் ஒரே ஒரு மாத்திரை தீர்வு என்று விவேக் கூறுவார். அதுபோல் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தமிழ்நாட்டிற்கு முழுமையான தீர்வு.

முதல்வர் பயந்துவிட்டார் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மோடி, அமித்ஷா அடிக்கடி வருகிறார்கள். கூட்டணி கட்சிகள் மக்களின் ஆதரவை பார்த்து முதல்வர் புலம்புகிறார்.

வடிவேலு திரைப்படத்தில் சுடுகாட்டில் புலம்புவது போல் ஐயோ என்னைத் தவிக்க விட்டார்களே என்று முதல்வர் புலம்புகிறார்

சசிகலா கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார் செல்லூர் ராஜு.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:53 PM
summary

Roles in government will not match; Chief Minister may have told Congress directly says Sellur Raju

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:53 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.