முகப்பு
தற்போதைய செய்திகள்

சிங்காரவேலரின் புகழை வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்: மு.க.ஸ்டாலின்

தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம் என முதல்வர் வலியுறுத்தியிருப்பது குறித்து..

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:55 AM
மு.க.ஸ்டாலின்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:51 AM

இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:51 AM

விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாள் தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த - பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்!

Advertisement

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் 'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை' என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! என தெரிவித்துள்ளார்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:51 AM
summary

CM Social Media Message-Singaravelar

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:51 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.