முகப்பு
தற்போதைய செய்திகள்

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:24 AM
- ENS
பகிர்:

பங்குச் சந்தைகள் இன்று(பிப். 18) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,553.59 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 131.51 புள்ளிகள் குறைந்து 83,319.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42.50 புள்ளிகள் குறைந்து 25,682.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

சென்செக்ஸ் குறியீட்டில் டாடா ஸ்டீல், ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 3.4 சதவீதம் வரை உயர்ந்து லாபமடைந்து வருகின்றன. நேர்மாறாக டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவை 2.39 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு சமநிலையில் உள்ள அதேநேரத்தில் ஸ்மால்கேப் குறியீடு 0.18 சதவீதம் உயர்ந்தது.

துறைகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 0.87 சதவீதம், பொதுத்துறை வங்கி குறியீடு 1 சதவீதம், எஃப்எம்சிஜி 0.28 சதவீதம் அதிகரித்தது. அதேநேரத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 2.4 சதவீதம் சரிந்தது. ஆட்டோ, மீடியா, பார்மா, ரியல் எஸ்டேட் குறியீடுகளும் சரிவில் உள்ளன.

summary

Stock Market: Sensex down 100 pts; Nifty below 25,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments