முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! நிஃப்டி 25,700!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 5:50 AM
பகிர்:

பங்குச் சந்தைகள் இன்று(பிப். 19) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,969.82 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 341.06 புள்ளிகள் குறைந்து 83,393.19 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.70 புள்ளிகள் குறைந்து 25,718.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, எச்யுஎல், மாருதி சுசுகிதவிர, சென்செக்ஸின் பிற பங்குகள் சரிவில் வர்த்தகமாகின்றன. இண்டிகோ, டிரென்ட், பிஇஎல், எம் அண்ட் எம், பவர் கிரிட், ஆர்ஐஎல் ஆகியவை 1.8 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப் 100, ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 0.52 சதவீதம், 0.11 சதவீதம் சரிந்துள்ளன.

துறைகளில் நிஃப்டி ஐடி குறியீடு 0.88 சதவீதம் உயர்ந்தது, தொடர்ந்து நிஃப்டி பார்மா குறியீடு 0.22 சதவீதம் உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.2 சதவீதமும் சரிந்தன.

summary

Stock Market: RIL, ICICI Bank drag Sensex by 300pts, Nifty below 25,750

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments