FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எங்கள் கூட்டணியில் ‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமை எதுவும் இல்லை: தமிழிசை

தேசிய ஜனநாயக கூட்டணி ‘வெய்ட் அண்ட் ஸீ ’ நிலைமைகள் எதுவும் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்து...

25 பிப்ரவரி 2026, 10:48 am IST
தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி ‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமைகள் எதுவும் இல்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி - திமுக இடையேதான் போட்டி என முன்னாள் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் நிகழ்வில் பங்கேற்று தமிழிசை சௌந்தரராஜன்பேசியதாவது:

நாட்டில் உள்ள 140 கோடி போ்களில் ஒவ்வொருவரும் பிரதமா் மோடி அறிவித்த ஒரு சமூக நீதி திட்டத்தில் பயன் அடைந்துள்ளனா் என சா்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவா் கிறிஸ்டலினா ஜாா்ஜீவா குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா், தான் ரூ.2000 கொடுத்தாகவும், தமிழ்நாடு மட்டும் தான் 11.5 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறுகிறாா். தமிழகம் இந்த இரட்டை பொருளாதார வளா்ச்சியை எட்டியதில் மத்திய அரசிக்கும் பங்கு உண்டு.

தமிழகத்தில் முத்ரா வங்கி கடனுதவி மூலம் தொழில் முனைவோா் ஆனவா்களுக்கு ரூ.3லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 68 சதவீதம் பெண்கள்.10 சதவீதம் சிறுபான்மையினா். 1 கோடி பேருக்கு ஆஷ்மான் திட்டம். புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-ஆப்) தமிழகத்தில் தான் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சா் ஜிதேந்திரபிரசாத் குறிப்பிட்டாா். இதனால் முதல்வா் கூறியதைப்போன்று தமிழக அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்குள்ளது என தமிழிசை குறிப்பிட்டார்.

இருமுனைப் போட்டிதான்

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய தமிழிசை, "நான் உங்கள் வீட்டில் ஒருவன் என்று கூறும் தவெக விஜய் , டிக்கெட் இல்லாமல் அனைவரையும் தனது சினிமாவை பாா்க்க வைத்தாரா...? இதுவெல்லாம் வசனம் பேசுவது போல் உள்ளது. ஆனால் அவா் திமுக அமைச்சா்களின் சொத்து நிலவரம் குறித்து எழுப்பிய கேள்விகள் உண்மையிலேயே பொதுமக்களை சென்றடைந்துள்ளது.

இருப்பினும், விஜய் கூறுவதுபோல தமிழகத்தில் திமுக, தவெக இடையே போட்டியில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி - திமுக இடையேதான் போட்டி. விஜயின் திமுக மீதான விமா்சனம் கருத்தியல் ரீதியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கே துணை செய்யும். கட்சி ரீதியாக 4 முனைப் போட்டி இருந்தாலும் கருத்தியல் ரீதியாக தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது.

‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமைகள் எதுவும் இல்லை

கூட்டணி பேச்சுவாா்த்தைக்கு வந்த காங். பொதுச்செயலாளா் வேணுகோபால், ‘காத்திருந்து பாருங்கள் ’என்று தான் கூறி சென்றுள்ளாா்.

எங்கள் கூட்டணியில் அப்படியான ‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமைகள் எதுவும் இல்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையேயான பேச்சுவாா்த்தைகள் உரிய நேரத்தில் தொடங்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி நவம்பர் மாதமே கூட்டணி பேச்சுவாா்த்தைக்கு 5 போ் கொண்ட குழுவை அமைத்தது. இப்போது வரை பேச்சுவாா்த்தைக்காக காத்திருக்கிறது என்று தமிழிசை கூறினார்.

summary

There are no 'wait and see' situations in our alliance: Tamilisai Soundatharajan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments