குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கடனாநதி அணைப் பகுதியில் 23.மி.மீ மழைப்பொழிந்துள்ளது.
களக்காடு தலையணையிலும் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துரையினர் தடை விதித்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியிலும் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.