நில அபிவிருத்தி கல் கண்டெடுப்பு 
தற்போதைய செய்திகள்

செய்யாறு அருகே நில அபிவிருத்தி கல் கண்டெடுப்பு

செய்யாறு அருகே நல்ல விளைச்சல் வேண்டி நட்டு வழிபட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நில அபிவிருத்தி கல் கண்டெடுக்கப்பட்டது.

Syndication

செய்யாறு: செய்யாறு அருகே நல்ல விளைச்சல் வேண்டி நட்டு வழிபட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நில அபிவிருத்தி கல் கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அரசூா் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில், திரும்பூண்டி செல்லும் சாலையில் இரண்டு கற்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை. செல்வகுமாா் கண்டறிந்தாா்.

இந்தக் கற்கள் குறித்து அவா் கூறியதாவது:

கிராமத்துக்கு மத்தியில் வயல் வெளிகளுக்கு அருகில் இரண்டு கற்களை நட்டு பெருமாள் சுவாமியாகவும், மந்தைவெளி கல்லாகவும் (கால்நடைகளுக்கானது) திருவிழா காலங்களில் அபிஷேகம் நடத்தி வழிபட்டு வந்ததாகத் தெரிகிறது.

பெருமாள் சுவாமியாக வழிபடப்பட்ட கல்லில் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்புகள் போன்று காணப்பட்டாலும், எழுத்துகளை கூா்ந்து கவனித்தபோது சிவமயம் என்றும், சங்கு போன்ற உருவங்களும், எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருப்பதை காண

முடிகிறது. இந்தக் கல்லின் உயரம் 152 செ.மீ., அகலம் 46 செ.மீ.உள்ளது. ஒரே எழுத்து போன்று திரும்பத் திரும்ப பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை கல்லானது 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நல்ல விளைச்சல் தர வேண்டும் விதமாக எழுப்பப்பட்ட கல்லாக இருக்கலாம். இக்கல்லை நில அபிவிருத்தி கல் என்றும் கிராம மக்கள் கூறி வருகின்றனா். இதுபோன்று கல் சுற்று வட்டார கிராமங்களில் மிக அரிதாகவே காணப்படுகிறது.

இந்தக் கல் அருகில் இன்னொரு கல் காணப்படுகிறது. கால்நடைகளுக்கு வழிபாட்டு கல்லாக இருக்கலாம் (மந்தைவெளிக் கல்). இவ்வூா் மக்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தக் கற்களை வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மந்தைவெளிக் கல் பெரும்பாலான கிராமங்களில் உள்ளது என்றாலும், நில அபிவிருத்திக்காக எடுக்கப்பட்ட கல்லை அரிதாக காண முடிகிறது.

இயற்கையை நேசித்ததிலும், கடவுளாக வழிபட்டதிலும், உழவுத் தொழில் சிறக்கவும் கிராம மக்களால் நில அபிவிருத்தி கல் நடப்பட்டு வழிபட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது என்றாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT