நாடு முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
நாடு முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து...
இணையவழி மருந்து விற்பனையைத் தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இணையவழி மூலம் வலி நிவாரணி மற்றும் தூக்க மருந்துகள் இணைய வழி மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும், உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதம், அதிக தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்துதல், போலி மருந்து விற்பனையை தடுத்தல், கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், கலாசார சீரழிவை தடுத்தல், இணையவழி மருந்தக செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகா்கள் சங்கம் புதன்கிழமை(மே 20) நாடு தழுவிய ஒரு நாள் மருந்தகங்களை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
கேரளம், மேற்கு வங்கம், கர்நாடகத்தில் மருந்தகங்கள் திறந்திருக்கும் என சங்கங்கள் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 50,000 மருந்தகங்கள் மூடப்பட்டாலும் 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல செயல்படும் எனவும், மக்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பாா்மசி, முத்து பாா்மசி போன்ற மருந்தகங்கள், முதல்வா் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு விற்பனை நிலையங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை.
அவசரத் தேவைகளுக்கான மருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி இயக்குநரின் கீழ் 2 மருந்து ஆய்வாளா்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபடும் மருந்து வணிகா்களும், அவசர தேவைக்கு உதவ தயாராக உள்ளனா். இதனால், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராகத்தான் மருந்தக வணிகர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசும் வலியுறுத்தும் என கூறப்பட்டுள்ளது.
Regarding the nationwide strike by pharmacy owners...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.