அழகே அழகு

ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் நெல்லிக்காய்!

ஆரோக்கியமான கூந்தல் பெற செயற்கை வழிமுறைகளைத் தேடி அலையும் பலருக்கு நெல்லிக்காய் ஒரு தீர்வாக இருக்க முடியும். 

தினமணி

ஆரோக்கியமான கூந்தல் பெற செயற்கை வழிமுறைகளைத் தேடி அலையும் பலருக்கு நெல்லிக்காய் ஒரு தீர்வாக இருக்க முடியும். 

கூந்தல் அடர்த்தியில்லாமல் இருந்தாலோ, முடி உதிர்தல், முடி உடைதல் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலோ அதற்குத் தீர்வாக நெல்லிக்காயை பயன்படுத்தலாம். 

மற்ற எண்ணெய்களுக்கு பதிலாக நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினால் கூந்தல் அடர்த்தியாகும்.

நெல்லிக்காயை பொடி செய்து தலைக்கு பயன்படுத்தலாம். அதாவது, நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகும். தலையில் பொடுகுத் தொல்லை நீங்கும், முடி உதிர்தல் படிப்படியாகக் குறையும். 

மேலும் தற்போதுள்ள உணவு பழக்கவழக்க முறை, மன அழுத்தம் ஆகியவற்றால் இளமையிலே முடி நரைத்து விடுகிறது. எனவே, நெல்லிக்காயை பல்வேறு வழிகளில் பயன்படுத்தும்போது தலைமுடியை அழகாக பராமரிக்க முடியும். 

தலைமுடியை பராமரிக்க தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் முடியை பராமரிப்பதோடு சருமம் நன்கு பொலிவாக இருக்கும். உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி உடலில் கழிவுகள் தேங்குவதைத் தடுக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

இன்னும் எத்தனை காலம்... பாம் புதிய பாடல்!

தவெக தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!

பாரதிராஜா நடிக்கும் புலவர் படத்தின் முதல் பார்வை வெளியீடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT