அழகே அழகு

கருவளையம் இருக்கிறதா? இயற்கையான முறையில் சரிசெய்ய டிப்ஸ்!

கருவளையத்தை இயற்கையான முறையில் சரிசெய்வது பற்றி...

DIN

கருவளையத்தை இயற்கையான முறையில் சரிசெய்வது எப்படி எனப் பார்க்கலாம்...

முகத்திற்கு அழகே கண்கள்தான். அந்தவகையில் கண்களில் கருவளையம் ஏற்படுவது முக அழகையே கெடுத்துவிடும். ஏன் ஆண்களுக்குக்கூட இப்போதெல்லாம் கருவளையங்கள் ஏற்படுகின்றன.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, இருட்டில் மொபைல்/டிவி அதிகம் பார்ப்பது, தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளால் கண்களில் கருவளையம் ஏற்படுகிறது. கண்களுக்கு ஓய்வு தேவை என்பதன் அறிகுறிதான் கருவளையம்.

கருவளையத்தை இயற்கையான முறையில் படிப்படியாக சரிசெய்ய முடியும். எப்படி?

உருளைக் கிழங்கை தோல் சீவி கொஞ்சம் சதைப் பகுதியை மிக்சியில் போட்டு அரைத்து, இதனை கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

எண்ணெய், சருமத்துக்கு அதிக பலனை அளிக்கக்கூடியது. அந்த வகையில் கண்களைச் சுற்றி நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இரவு தூங்கும் முன்பாக இதைச் செய்வது நல்லது. பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்யும் கருவளையத்தை படிப்படியாக மறையச் செய்யும்.

குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.

அடுத்து மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்தாலும் கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காயை வட்டவடிவில் நறுக்கி கண்களில் வைக்கலாம் அல்லது அதனை மிக்சியில் அரைத்து பேஸ்ட்டாகவும் கண்களைச் சுற்றித் தடவலாம்.

கற்றாழை ஜெல்லையும் கண்களைச் சுற்றித் தடவலாம். கற்றாழையால் சரும அலர்ஜி ஏற்படும் என்பவர்கள் இதனைத் தவிர்த்துவிடலாம்.

வாழைப்பழத் தோலையும் கருவளையம் இருக்கும் பகுதிகளில் வைக்கலாம். இதுவும் நல்ல பலனைத் தரும்.

இறுதியாக கண்களில் கருவளையம் மறைய நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும். நாள் ஒன்றுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT