ரசிக்க... ருசிக்க...

டேஸ்டி ஸ்பைஸி குடைமிளகாய் பொரியல்

குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பொட்டுக் கடலையைப்  பொடித்து வைக்கவும்.

எஸ். சரோஜா

குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருள்கள்:
குடைமிளகாய் - 3
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 3   தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு -  தேக்கரண்டி

செய்முறை: 

குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பொட்டுக் கடலையைப்  பொடித்து வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளிக்கவும்.  பின்னர்,  பொடியாக  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.  

அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின் குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்னர், பொடித்து வைத்த பொட்டுக்கடலைப் பொடியை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.  சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

SCROLL FOR NEXT