ரசிக்க... ருசிக்க...

சல்ஃபர் இல்லாத சர்க்கரை ரொம்ப நல்லது!

ENS


நாம் எப்போது வெள்ளைச் சர்க்கரையை சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றுதான், நமது அடிப்படை உணவான அரிசியே நமக்கு எதிராக மாறியது.

வெள்ளைச் சர்க்கரையால் ஏற்படும் நீரிழிவு நோய், பல்வேறு நோய்களுக்கு வாசலாகவும் மாறி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் இன்று நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால், நாம் எந்த வகையிலும் ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாத அளவுக்கு சர்க்கரை, நமது உணவுகளில் கலந்து விட்டிருக்கிறது.

வரும் புத்தாண்டிலாவது, இந்த சல்ஃபர் கலந்த சர்க்கரைக்கு நாம் விடை கொடுப்போம். சர்க்கரையை சுத்தப்படுத்த அல்லது வெள்ளையாக்கப் பயன்படும் ஆசிட்தான் சல்ஃபர்.  ஆனால் தற்போது சல்ஃபர் கலந்து சுத்திகரிக்கப்படாத, சல்ஃபர் ப்ரீ சுகர் என்ற பெயரில் சர்க்கரை விற்பனைக்கு வருகிறது.

இந்த சர்க்கரையை சல்ஃபருக்கு பதிலாக பாஸ்பரிக் ஆசிட் மற்றும் பாஸ்பேட் உப்பு கலந்து சுத்தப்படுத்துவார்கள். இது ஒரு மிகச் சிறந்த மாற்று வழியாகவும், மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகவும் மாறி வருகிறது. அது மட்டுமல்லாமல் இது உடல் நலத்துக்கு ஏற்றதாகவும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகவும் உள்ளது.

அதே சமயம், நாம் சாப்பிடும் உணவிலும் இந்த சல்ஃபர் உள்ளது. முட்டை, சீஸ், தானியங்கள், பால் மற்றும் இறைச்சியிலும் இந்த சல்ஃபர் இருக்கிறது. ஆனால், இது நமது உடலுக்குத் தேவையானதாகவே உள்ளது. ஆனால், சர்க்கரையில் கலக்கப்படும் சல்ஃபர் ஒரு ரசாயனமாக பயன்படுவதால், அது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT