பள்ளி மாணவர்களுக்கான அட்வான்ஸ் ஆஸ்திரேலியா, இந்தியா ஸ்கூல் காணொளிப் படப் போட்டி!
போட்டிக்கான கடைசித் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலதிக விவரங்களுக்கு http://www.a2oz.org/ எனும் இணைய தளத்தை அணுகவும்.
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் IGCSE, IB, CBSE, ICSE மற்றும் ஸ்டேட் போர்டு திட்டங்களில் பயிலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் முதன்மையான பல்கலைக் கழகங்கள் சிலவற்றை சுற்றிப் பார்க்க ஒரு அருமையான வாய்ப்பு.
கேம்பிரிட்ஜ் இங்லீஷ் லாங்வேஜ் அசெஸ்மெண்ட் கழகமும், ஆஸ்திரேலியன் டிரேட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் கமிஷனும், ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக் கழகம், RMIT, மாக்வாரி பல்கலைக் கழகம், தெற்கு குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகம் உள்ளிட்ட முதன்மையான ஆஸ்திரேலியப் பலகலைக் கழகங்களுடன் இணைந்து இந்தியாவில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காணொளிப் படப் போட்டி ஒன்றை அற்வித்திருக்கின்றன. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பள்ளி வாயிலாக ஐந்து குழுக்களை போட்டிக்கு நாமினேட் செய்யலாம்.
காணொளிப் போட்டிக்கான தலைப்புகள்:
- புவி அறிவியல்
- நடனம் மூலம் கதை சொல்லல்
- நானோ தொழில்நுட்பம்
- கட்டுமான மேலாண்மை
- வான்வெளி
மேற்கண்ட தலைப்புகளில் பள்ளிகள் தங்கள் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.
போட்டிக்கான கடைசித் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலதிக விவரங்களுக்கு http://www.a2oz.org/ எனும் இணைய தளத்தை அணுகவும். இந்தியப் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மற்றும் அறிவாற்றல் இரண்டிலுமே சவாலான அனுபவங்களத் தருவதோடு தங்களது ஆங்கிலப் புலமையை அதிகரித்துக் கொள்ளவும், பட்டை தீட்டிக் கொள்ளவும் எதிர்காலத்தில் இவை உதவும்.