முகப்பு
செய்திகள்

அமீர்கான் வீட்டில் திருட்டு!

அமீர்கானின் வீட்டில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் வைர மோதிரம் இரண்டும் திருடு போய் விட்டதாம்

Updated On : 30 நவம்பர், 2016 at 2:34 PM
பகிர்:

மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் அமீர்கானின் வீட்டில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் வைர மோதிரம் இரண்டும் திருடு போய் விட்டதாம். நகைகளின் உடைமையாளரான அமீர்கானின் மனைவி கிரண் ராவ் சார்பில் இது தொடர்பாக மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் கர் காவல் நிலையத்தில் கிரணின் உறவினர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.
உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல துறை அதிகாரிகள் IPC 453 பிரிவின் கீழ் (குடியிருக்கும் வீட்டில் திருட்டு) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் காவல் துறையினரின் முதன்மை சந்தேகம் அமீர்கான் வீட்டு வேலையாட்கள் மீது திரும்பி இருக்கிறது. அதன் அடிப்படையில் வீட்டு சமையல்காரர், கிரண் ராவின் உதவியாளர், வீட்டு வேலைக்காரப் பெண்மணி முதலியோரை காவல நிலையத்திற்கு வரவழைத்து காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், ஆனாலும் இந்த வழக்கில் இதுவரை உண்மைக் குற்றவாளி என எவரும் பிடிபடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.