செய்திகள்

பெற்றோர், உறவினர் புடைசூழ பெண்ணே பெண்ணை மணந்து கொண்ட விந்தை திருமணம்!

கார்த்திகா வாசுதேவன்

திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த இந்திய மக்களின் அணுகுமுறை இப்போதும் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் விரும்பத் தகாததாகவே கருதப் பட்டு வருகிறது. இந்தச் சூழல் மாறிக் கொண்டே வருவதற்கான உதாரணங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்றாலும் அவர்களுக்கான சமூக நீதி முழுமையாகக் கிடைத்து விட்டது என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் அவர்களுக்கான சமூக அங்கீகாரங்கள் வலுப்படவும் அவர்களே தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. அந்த வகையில் இன்றைய பரபரப்பான செய்தி பஞ்சாபைச் சேர்ந்த திருநம்பி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்) மஞ்ஞித் கெளர் என்பவர் தனது தோழியும் பார்ட்னருமான மற்றொரு பெண்ணை இந்து திருமணச் சம்பிரதாய முறைப்படி மணம் புரிந்துள்ளார். இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண விசயமே. ஆனால் மஞ்ஞித் கெளர் இதைச் சாதித்தது தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது சம்மதத்துடனும் எனும் போது இந்தச் சம்பவம் மக்களிடையே கவனம் ஈர்க்கிறது. 

பஞ்சாப் மத்திய சிறைச்சாலையில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் மஞ்ஞித் கெளர் தற்போது வசிப்பது கபுர்தலாவில். தனது திருமணத்திற்காக சிவப்பு டர்பன் அணிந்து கொண்டு தானே தனக்கான சாரட் வண்டியை ஓட்டிக் கொண்டு மஞ்ஞித் கெளர் திருமண நிகழ்விற்கு வந்ததாக குறிப்பிடுகிறார்கள். அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் திருமணத்தின் சிறப்பே இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு இவர்களுக்கு மனமுவந்து திருமணம் செய்து வைத்திருப்பது தான். குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் ஒத்துக் கொண்டால் மட்டும் போதாது... இனி இவர்கள் மனமொத்து வெற்றிகரமாக வாழ்வதில் இருக்கிறது இவர்களுக்கான சமூக அங்கீகாரம். அதில் வெற்றி கண்டார்கள் எனில் இந்தத் திருமணம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே பிற்காலத்தில் சிறந்த முன்னுதாரணமாகக் கொள்ளப்படலாம். புரட்சிகரமான சமூக மாற்றங்கள் அனைத்துமே சிறு பொறியாகத் தான் துவங்கும். அதன் வெற்றி என்பது அது எத்தனை பேருக்கு பலன் அளித்தது, எத்தனை பேரின் வாழ்வில் பின்பற்றத் தக்கதாக இருந்தது என்பதைப் பொறுத்தது.

இரு பெண்கள் திருமணம் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதைத் தாண்டி அவர்கள் இருவரது மன உணர்வுகளையும் உரிய வகையில் அவர்களது பெற்றோர்கள் உணர்ந்து கொண்டார்கள், ஏற்றுக் கொண்டார்கள் என்பதே இதில் புதுமை தான்.

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT