செய்திகள்

மும்பையில் திருமண மண்டபத்தைத் தேர்வு செய்ய உதவும் தளம்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சந்தோஷத் தருணம் அவரவர் '

DIN


 
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சந்தோஷத் தருணம் அவரவர் 'வெட்டிங் டே’ தானே? இந்த நன்நாள் மறக்க முடியாத ஒன்றாக மாறவேண்டுமெனில் அதிக சிரமும் டென்ஷனும் இல்லாமல் மணமக்கள் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். ஆனால் மும்பையில் மணமக்கள் தங்கள் திருமணத்துக்கான சரியானதொரு மண்டபத்தைத்  தேடிக் கண்டுபிடிப்பதற்குள் சலிப்பாகி விடுகின்றனர்.

இனி அந்தக் கவலை வேண்டாம்! இந்தச் சிக்கலைத் தீர்க்க வெட்டிங்.நெட் (Wedding.net) இருக்கவே இருக்கிறது. இனி மணமக்கள் மேரேஜ் மஹால் தேடி மணிக்கணிக்காக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. எங்கும் அலைந்து திரியாமல் கல்யாணத்துக்கான அனைத்து விஷயங்களுக்கும் ஒரே இடமாக Wedding.net-க்குச் சென்று ஒரே ஒரு க்ளிக்கில் தங்களுக்குப் பிடித்தமான வெட்டிங் டெஸ்டினேஷனைத் தேர்வு செய்து கொள்ளலாம். அது மட்டுமல்ல ஃபோட்டோகிராபர் முதல் உடையலங்காரம் வரை வெட்டிங்கிற்குத் தேவையான ஏ - இஸட் விற்பனையாளர்களின் விபரங்கள் மொத்தமும் Wedding.net-ல் உள்ளது. 

Wedding.net-ல் திருமண மண்டபங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் உள்ளன. ஒவ்வொரு இடத்தைப் பற்றிய முழு விபரங்கள் விரிவாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒவ்வொரு இடமாக அலசி ஆராய்ந்து, இறுதியான முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்.

Wedding.net-ல் பின்வரும் வசதிகள் உள்ளன

  • திருமண ஹாலின் அளவு - உங்கள் திருமணத்துக்கு வருகை தரவிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்கும் இடங்களை ஒரே கிளிக்கில் நீங்கள் பார்க்கலாம்.
  • உணவுக்கான விலை - சைவம் அசைவம் என எந்த உணவாக இருந்தாலும் ஒவ்வொரு இலைக்குமான விலையை உங்கள் பட்ஜெட்டுக்குப் பொருந்தமான வரம்புக்குள் தேர்வு செய்து கொள்ளலாம்.

வேறு என்ன?

மேலும், ஒவ்வொரு மண்டபத்தைப் பற்றிய முழு விபரங்கள், பூ அலங்கரிப்புச் சேவைகள், அதற்கான விதிகள், விலைப் பட்டியல், அதிகப்படியாக தேவைப்படும் சேவைக்கான கட்டண விபரங்கள், ஒவ்வொரு அறைக்குமான கட்டணங்கள், பார்கிங் வசதி பற்றிய குறிப்பு என அனைத்துத் தகவல்களையும் இந்த இணையதளத்தில் பெற முடியும்.

Wedding.net நேரடியாக ஹால் உரிமையாளர்களிடம் இணைப்பில் இருப்பதால் மண்டபத்தைப் பற்றிய அனைத்து விபரங்களும் முழுமையாக பதிவேற்றப்பட்டிருக்கும். இந்த இணையதளத்தில் திருமண ஜோடிகள் தங்களுக்குத் தேவையான கல்யாண மண்டபத்தை மிக எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT