செய்திகள்

130 மனைவிகள், 203 குழந்தைகள் எனப் பெருவாழ்வு வாழ்ந்த முஸ்லீம் மதபோதகர் மரணித்தார்!

100 க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் தான் ஒரு ஆண் தனது வாழ்வில் அனைத்து செளகரியங்களையும் அடைய முடியும் என்று கூறி கிட்டத்தட்ட 130 பெண்களை திருமணம் செய்து

கார்த்திகா வாசுதேவன்

முகமது பெல்லோ அபுபக்கர், கடந்த சனிக்கிழமை அன்று நைஜீரிய நகரமான பிடாவில் தனது 93 வது வயதில் காரணம் குறிப்பிட முடியாத உடல் நலிவால் மரணம் அடைந்தார் என அவரது சீடரும், உதவியாளருமான முதாயிர் ஷலா உத்தீன் நைஜீரிய செய்தி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குரானில் சொல்லப்பட்ட விசயங்களுக்கு தனது தனிப்பட்ட வாழ்வின் மூலம் அசாதாரண விளக்கங்கள் அளிப்பது, 100 க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் தான் ஒரு ஆண் தனது வாழ்வில் அனைத்து செளகரியங்களையும் அடைய முடியும் என்று கூறி கிட்டத்தட்ட 130 பெண்களை திருமணம் செய்து கொள்வது, என இவர் முன்பே இந்திய ஊடகங்களிலும் பிரபலமானவர் தான்.

2008 ஆம் வருடம் உலகின் பிற நாடுகளில் இருந்த முஸ்லிம் மத போதகர்கள் சிலர் அபுபக்கரின் விந்தை திருமணங்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் உடனடியாக தனது 86 மனைவிகளில் 82 பேரை விவாகரத்து செய்து விட்டு 4 மனைவிகளோடு மட்டும் வாழ வேண்டும் என பிற மத போதகர்கள் நிர்பந்தித்தனர். ஆனால் அபுபக்கர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்து விட்டதோடு தனது திருமணங்கள் அனைத்துமே தனது வாழ்நாளில் தன்னால் செய்ய முடிந்த  ‘தெய்வீகப் பணிகள்’ என்று கூறி பிறரது விமர்சனங்களைப் புறம் தள்ளினார். தற்போது தனது 93 வயதில் அபுபக்கர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு 130 மனைவிகள் மூலமாக 203 குழந்தைகள் இருப்பதாகவும், மனைவிகளில் சிலர் கர்ப்பிணிகளாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

SCROLL FOR NEXT