செய்திகள்

அதிமுக முன்னணித் தலைவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்பது வதந்தி: தீபா!

கார்த்திகா வாசுதேவன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி தமிழ் ஊடகங்களில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தாலும். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை தீபா வெளிப்படையான, அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு பொது அரங்குகளில், பொதுமக்கள் முன்னிலையில் பிரவேசித்து தனது அரசியல் பணிகளைத் தொடங்கத் தயங்குவதால் அவரது ஆதரவாளர்களில் சிலர் மனச்சோர்வு அடைந்துள்ளனர். தீபாவின் அரசியல் பிரவேசத்தை விரும்பாத சிலரோ ‘தீபா அரசியலுக்கு வர மாட்டார், அவர் தனது அத்தை கோலோச்சிய கட்சியின் அதிகாரப் பங்கீட்டு விசயத்தில் இப்போதையை அதிகார மட்டத்தினருடனும், அதிமுக முன்னணித் தலைவர்களுடனும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்பதாக வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தீபா; 

அரசியல் பிரவேசம் என்பது எனது உறுதியான முடிவு. தினம் எனது வீட்டின் முன்னால் குவிகின்ற ஆயிரக்கணக்கான அதிமுக அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் என்னைப் பற்றி அவதூறு கிளப்புபவர்கள் தோற்றுப் போவார்கள். இப்போதைய அதிமுக முன்னணித் தலைவர்களுடன் எந்த விதமான ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் நான் ஈடுபடவில்லை. என்னை நம்பி தினமும் என் வீட்டின் முன் குவியும் எனது ஆதரவாளர்களின் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் எனது அரசியல் பிரவேசம் நிச்சயம் நிகழும் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT