செய்திகள்

4000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்கள் என்ன செய்தார்கள்?

IANS

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பகால ப்ரான்ஸ் ஏஜ் (Bronze Age) காலகட்டத்தில், ஐரோப்பியப் பெண்கள் தங்கள் குடும்பங்களை உருவாக்குவதற்கு தூர தேசப் பயணம் செய்து, புதிய கலாச்சார விஷயங்கள் கற்றனர். புதிய வாழ்க்கைக்காக இடமாற்றத்துக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர். அதே நேரத்தில் ஆண்கள் தாங்கள் பிறந்த பகுதியிலேயே தங்கிவிட்டனர். இப்பழக்கம் கிட்டத்தட்ட 800 ஆண்டு காலம் இருந்து வந்தது என்கிறது சமீபத்திய ஆய்வு.

அக்காலத்துப் பெண்கள் கலாச்சார பொருட்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தை நிகழ்த்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். இது ப்ரான்ஸ் ஏஜில் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

PNAS என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 2500 மற்றும் 1650 கி.மு. இடையே புதைக்கப்பட்ட 84 நபர்களின் எஞ்சியவற்றை பரிசோதித்து, ஸ்டோன் ஏஜ் முடிவில் மற்றும் ப்ரான்ஸ் ஏஜின் ஆரம்பக் கட்டத்தில் அம்மக்கள் வியக்கத்தக்க வகையினில் தெற்கு லெக், தெற்கு ஆக்ஸ்பர்க் (இந்நாளைய ஜேர்மனியில்) தங்களுடைய குடும்பத்துடன் குடிபுகுந்திருந்தனர் என்பதைக் கண்டறிந்தனர். இதில் பெரும்பான்மையான பெண்கள் இப்பகுதியில் வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. ஒருவேளை போஹேமியா அல்லது மத்திய ஜெர்மனியிலிருந்து அவர்கள் வந்திருக்கக் கூடும். ஆனால் ஆண்கள்  அதே பிரதேசத்தில் பிறந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

'இந்தப் பெண்களின் வம்சாவளிகளில் அதிக வேறுபாடுகள் காணப்படுவதால், இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பயணப்பட்டு கடைசியில் லெக் பிரதேசத்திற்கு வந்திருக்கலாம் என்று ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அலிஸா மிட்னிக் கூறினார்.   

'ஒட்டு மொத்தக் குழுவினராகவும், சில சமயங்களில்  தனிப்பட்ட பயணமாகவும் இப்பெண்களின் இடமாற்றம் இருந்து வந்துள்ளது. இது அவர்களுக்கு தற்காலிகமான ஒன்றல்ல. ஆண்டாண்டு காலமாக, அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு இது தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. கணவன் என்பவன் ஒரே இடத்தில் இருக்க, மனைவி வேறொரு இடத்திலிருந்து அங்கு வந்தவளாக இருந்து வந்தாள். ஓரிடத்தில் பிறந்து வேறு ஒரு இடத்தில் புலம் பெயர்வது என்பது காலம் காலமாக பெண்களின் நிலையாக இருந்து வருகிறது’ என்றார் ஆய்வாளர்.

இந்த ஆய்வின் மூலம் ஆரம்பகால மனிதர்களின் இடமாற்றம் பற்றிய இந்த ஆய்வில் ஒரு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது. 'தனி நபர் இடமாற்றம் என்பது  அன்றிலிருந்து இன்று வரை மத்திய ஐரோப்பாவில் வாழும் மக்களின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது என்று லுத்விக் மாக்ஸ்மிலியன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் ஸ்டாக்ஹாம்மர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT